Monday, August 26, 2013

இன்றைய சமூக கட்டமைப்பிலும் மனிதன் அடிமையே!


பிரிவு : சமூக புரட்சி--> ஐரோப்பிய புரட்சி
எப்போதும் சமுதாய அமைப்புகள் ஒரே மாற்றத்தில் இயங்கிக் கொண்டிருப்பதில்லை. இன்றைய நாகரிகங்களாக கருதப்படுகின்றவை நாளைக்கு அநாகரிகமாக தெரிகிறது. இந்த அநாகரிக மாற்றம் சமூகத்தில் எப்படி ஏற்படுத்தப்படுகிறது?

ஒரு சமுதாயத்தின் பொருளாதார நிலைமையை முன்னிருத்தி அச்சமூதாயத்தின் சட்ட திட்டங்கள், ஒழுக்கங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் இருக்கின்றன. அப்படியானால் இச்சமூதாயத்தின் அமைப்புகள் என்பவை எவை?

ஒவ்வொரு சமூகத்திலும் இருப்பவர் சுரண்டுபவர்களாகவும், இல்லாதவர்கள் சுரண்டப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். இல்லாதவரை சுரண்டுவதற்காக என்னென்ன முறைகள் கையாளப்படுகின்றன? அப்படி கையாளப்படுவதற்கான வழிமுறைகள் எப்படி உருவாக்கப்படுகிறது? உருவாக்கப்பட்ட வழிமுறைகளை எப்படி செயல்படுத்துகின்றது?

அந்த காலத்தில் ஆண்டான் - அடிமைத்தனத்திற்கென ஒரு நீதி சொல்லப்பட்டது. மனிதர்களை வலை வீசி பிடித்தார்கள். சந்தையில் மனிதர்களை அடிமைகளாக விற்றார்கள். அடிமை என்பவன் மிருகத்தை விட கீழாக சமூகத்தில் நடத்தப்பட்டான். மிருகங்கள் இருக்கும் கொட்டகையே அவனுக்கும் இருப்பிடமானது. ஒரு மனிதன் எவ்வளவு அடிமைகளை வைத்திருக்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு அவனுக்கு சமூகத்தில் மதிப்பு இருந்தது. அந்த அடிமை முறை ஒழிக்கப்பட்ட போது அத்துடன் அடிமை முறை மானிட சமூகத்தில் ஒழிந்ததா?

எப்போதுமே சமூகத்தில் இரு பிரிவுகள் இருந்துக் கொண்டே இருக்கின்றன.

ஒருவர் சுரண்டுபவர் இன்னொருவர் சுரண்டப்படுபவர்.

இப்படிப்பட்ட மனிதர்களுக்குள்ளும் பொருள்களுக்குள்ளும் இடையே அவ்வப்போது நடைப்பெறும் மதிப்பீடு மாற்றங்கள் தான் சமுதாய அமைப்புகளை நிர்ணயிக்கின்றன.

ஆண்டான் - அடிமைகள் முறைக்கு எப்போதும் ஓர் மகத்துவம் சொல்வதுண்டு.

அடிமைகளை வேலை வாங்குவதும், அடிமைகள் என்பவர்கள் முதலாளி என்பவனுக்கு அடிப்பணிந்து போவதும் இருபிரிவினருக்கும் இடையே சமூகமாக இருக்கும் இருக்கும் என்பதும், அப்படி இருக்கும் போது தான் சமுதாயத்தின் நலன் பாதுகாக்கப்படும் என்றே சொல்லப்பட்டு வருகிறது. இந்த கருத்தை அடிப்படையாக வைத்தே சட்டங்கள் செயல்படுகின்றன. சட்டங்கள் கட்டமைப்புகளை உருவாக்கும் அதிகாரம் சுரண்டப்படுவர்களிடமே இருக்கும் போது சுரண்டப்படுபவர்களுக்கான உரிமையை எங்கே சென்று கேட்பது?

இன்னொரு பக்கம் பொருள் உற்பத்தி முறையில் மாற்றங்கள் ஏற்படும் போது புதிய புதிய ஆராய்ச்சிகள் மக்களுடைய அறிவு விருத்திகள் பொருளுற்பத்தி சாதனங்களின் பெருக்கங்கள் அல்லது மாற்றங்கள் நிகழும் போது சமூகத்தில் தானாகவே மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அதேபோல் ஒரு சமூகத்தில் உள்ள மக்களால் தங்களுடைய தேவைகளுக்கானப் பொருட்களைப் பண்படுத்தி பயன்படுத்தி கொள்ளும்போது அந்தப் பண்படுத்திக் கொள்ளும் முறையிலும் பயன்படுத்திக் கொள்ளும் முறையிலும் எந்த அளவுக்கு மாற்றங்கள் செய்துக் கொள்கிறார்களோ அந்தளவுக்கு அந்த சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

எனவே ஒரு சமுதாய அமைப்பினிலே ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கிய காரணம் சமுதாய பொருளாதார நிலைதான்.

பொருளாதார நிலைமையையொட்டி சமுதாய சட்டத்திட்டங்கள், அறநீதிகள், ஒழுக்க முறைகள், இலக்கிய வளர்ச்சி, மத உணர்ச்சி போன்றவைகள் இருக்கின்றன. இந்த கோட்பாட்டையே மார்க்ஸியம் முன்னிலைப்படுத்துகிறது. மார்க்ஸியத்தின் உயிர்நாடி இவை என்று கூட சொல்லலாம்.

மானிடத்தின் படிப்படியான வளர்ச்சி என்பது பல காலகட்டத்திலும் பொருளாதார மாற்றங்களின் வளர்ச்சியினால் மாற்றம் அடைந்து வந்திருக்கிறது என்பது மார்க்ஸியத்தின் சித்தாந்தம். மார்க்ஸியத்தின் இச்சித்தாந்தம் பல்வேறு விதங்களில் திரிபுவாதம் செய்யப்பட்ருக்கிறது. மார்க்ஸிம் ஏங்கெல்ஸிம் ஒரு குறிப்பிட்ட சமுதாய அமைப்பை பொருளாதாரத்தின் அடிப்படையை மட்டுமே வைத்து நிர்ணயிக்க முற்பட்டதில்லை.

ஏங்கெல்ஸ், ஜே. ப்ளாக் டாட்டேட் என்னும் தன் நண்பருக்கு சமுதாய அமைப்புகள் பொருளாதார மாற்றங்களின் மூலமே சமூக மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதைக் குறித்து கடித்தம் மூலமாக விவாதித்துக் கொள்கிறார்கள். அதில் ஏங்கெல்ஸ் எழுதிய சில கருத்துத்துக்கள்:

"உலகக் கண்கொண்டு மானிட ஜாதியின் சரித்திரத்தைப் பார்ப்பது என்ற கோட்பாட்டின்படி சரித்திரப்போக்கை நிர்ணயித்து பார்க்க வேண்டும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்கிற முறையைப் பொறுத்தே இருக்கிறது. இதற்கு அதிகமாக மார்க்ஸோ, நானோ ஒன்றும் சொல்லவில்லை. இதைத் திரித்துப் பொருளாதாரம் ஒன்றுதான் சரித்திரப் போக்கை தீர்மானிக்கிறது என்று நாங்கள் சொல்வதாக யாரேனும் சொல்வார்களானால்.....

அவர்கள் நாங்கள் சொல்லி இருக்கும் கருத்தை அர்த்தமில்லாமல் செய்துவிட்டவர்களாவார்கள். சமுதாயம் என்னும் கட்டடத்திற்கு பொருளாதாரம் என்பது அஸ்திவாரம் போன்றது. கட்டிடத்தின் மேல் பாகம் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக எழுந்த அரசியல் அமைப்பு போன்றவை. இந்த அரசியல் அமைப்பில் சட்டமுறைகள் தத்துவங்கள், மதக்கோட்பாடுகள் முதலியவைகள் சேர்ந்தே சரித்திரப்போக்கை நிர்ணயிக்கின்றது. (Marx - Engels Correspondence: Letter to J. Block dated 21-9-1890)

ஏங்கெல்ஸ் வார்த்தைகளை அடிக்கடி அடிக்கோளிட்டு பேச வேண்டிய சமூக சூழல் இன்றும் நம்மிடம் இருந்து கொண்டிருக்கிறது. மற்றப்படி இன்றைய சரித்திரப் போக்கை நம்மால் உறுதியாக பேசமுடியாவிடினும் நம்முடைய சமூக கட்டமைப்பில் மனிதனிடம் இருந்து அடிமைத்தனம் இன்னும் விலகிவிடவில்லை. ஆளப்படுபவர்களால், சுரண்டப்படுவோர்களால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தான் இருக்கிறோம்.

தமிழச்சி


நன்றி : http://tamizachi.com

Sunday, August 25, 2013

களப்பிரர் காலம் இருண்ட காலமா ? அது பொற்காலம் !



பாண்டிச்சேரியில் இருக்கும் E F E O நிறுவனம் இன்று ( 20.10.2010) களப்பிரர் காலம் குறித்த ஒரு நாள் பட்டறை ஒன்றை நடத்தியது. அதில் பார்வையாளராகக் கலந்துகொண்டேன். முற்பகலில் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த முனைவர் தயாளனும் , தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறையைச் சேர்ந்த முனைவர் செல்வகுமாரும் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். திரு.தயாளன் கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் தமிழகத்தில் சுமார் நூற்றியிருபதுக்கும் அதிகமான பௌத்த மையங்கள் உருவானதையும் அவை அப்போது சமூகத்தில் பெற்றிருந்த செல்வாக்கையும் விரிவாக எடுத்துரைத்தார். பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்ட தகவல்களும், அங்கு கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் பொருட்களும் பௌத்தம் செழித்திருந்ததன் அடையாளமாகத் திகழ்வதை அவர் ஒளிப்படங்களோடு விளக்கினார். இவ்வாறு பௌத்தம் செழித்திருந்தது என்றால் அதற்கு அப்போது அரச ஆதரவு இருந்திருக்கிறது என்றே பொருள். ஏனெனில் சங்க காலத்தில் பௌத்தம் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. பட்டினப்பாலையில் ஓரிடத்தில் மட்டுந்தான் அதைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும்கூட பௌத்தம் குறித்ததா என்பது ஐயமாகவே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அப்போது தமிழ்நாட்டை ஆண்டதாகக் கூறப்ப்டும் களப்பிரர்களை பௌத்தர்கள் அல்லது சமணர்கள் என்று திட்டவட்டமாகச் சொல்லமுடியாது என்றாலும் அவர்கள் காலத்தில் பௌத்தம் செழித்திருந்ததை உறுதியாகக் கூறலாம் என்று அவர் தெரிவித்தார். அடுத்ததாகப் பேசிய திரு. செல்வகுமார் , சங்க காலம் மற்றும் பிற்காலச் சோழர்கள் குறித்த மிகையான மதிப்பீடுகள் காரணமாக இடைப்பட்டக் காலம் ‘ இருண்ட காலம் ‘ என அழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். கி.பி.இரண்டாம் நூற்றாண்டுவரை கிரீஸ் , ரோம் முதலான பகுதிகளோடு வாணிபத் தொடர்பு மிகவும் மும்முரமாக நடந்திருக்கிறது. அதன் பின்னர் அதில் ஒரு தொய்வு ஏற்பட்டு அதற்குப் பதிலாகத் தென் கிழக்கு ஆசிய நாடுகளோடு வாணிபம் தீவிரம் அடைந்தது என்பதைப் பார்க்க முடிகிறது. அக்காலக் கட்டத்தில் சீனாவுடன் ஏற்பட்ட நெருக்கம் இங்கு பௌத்தம் தழைக்கக் காரணமாக அமைந்தது என அவர் கூறினார். அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பீங்கான் பொருட்கள் பற்றி விவரித்த அவர் இத்தகையக் கண்டுபிடிப்புகளின் பின்னணியில் மேலும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றார். சிதம்பரம் நடராஜர் கோயிலைப் பற்றி நல்லதொரு நூலை எழுதியிருக்கும் பால் யங்கர் என்பவர் , சிதம்பரம் ஒரு காலத்தில் களப்பிரர்களின் தலை நகராக இருந்தது என்று கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி அதுபற்றிய உங்களின் கருத்து என்ன என்று நான் கேட்டபோது ‘ களப்பிர மன்னன் ஒருவனுக்கு சிதம்பரத்தில் இருந்த தீக்‌ஷதர்கள் முடிசூட்ட மறுத்துவிட்டதாக ஒரு கதை உண்டு. களப்பிரர்களின் தலைநகராக சிதம்பரம் இருந்திருந்தால் அப்படிச் சொல்லியிருக்க முடியுமா ? எனத் தயாளன் என்னிடம் வினவினார். சத்ரபதி சிவாஜிக்கு நேர்ந்ததை நினைவில்கொண்டால் இந்தக் கேள்வி அர்த்தமற்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.நான் கவனப்படுத்த முயன்றது, சிதம்பரம் நடராஜர் கோயில் பௌத்த நோக்கிலிருந்து ஆராயப்படவேண்டும் என்பதைத்தான். சிதம்பரம் கோயில் வளாகத்திலிருக்கும், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இருந்த அவனியாளப்பிறந்தான் என்ற சிற்றரசனது கல்வெட்டு அக்கோயிலின் வளாகத்தில் காமக்கோட்டம் ஒன்று இருந்ததுபற்றியும் அதில் குழந்தைகளுக்குப் பாலமுது வழங்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. இந்தச் செய்தியை ஆராய்ந்திருக்கும் முனைவர் ஆ.பத்மாவதி அது பௌத்தத்தோடு கொண்டிருந்த தொடர்பின் அடையாளம்தான் என்று வலியுறுத்தியிருக்கிறார். நடராசர் என்பதே புத்தரின் பெயர்களில் ஒன்றுதான் என வீரசோழியத்தை ஆதாரமாககொண்டு அயோத்திதாசப் பண்டிதர் கூறியிருப்பதையும் நாம் நினைவுபடுத்திப் பார்க்கலாம் . சிதம்பரத்துக்கு அருகில் இருக்கும் திருச்சோபுரம், திருப்பாதிரிப்புலியூர் என்கிற கடலூர் ஆகிய இடங்களின் பௌத்தத் தொடர்புகளையும் இத்துடன் சேர்த்து ஆராய்ந்தால் அது மேலும் துலக்கம் அடையும். தமிழ் பௌத்தம் குறித்த ஆராய்ச்சியில் சிதம்பரம் ஒரு முக்கிய மையமாக இருக்கும். அதைப்பற்றி இதுவரை போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பது என் கருத்து. பிற்பகலில் , எனது தொகுதியில் ‘ கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ தொடர்பான அரசு நிகழ்ச்சிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரோடு கலந்துகொள்ளவேண்டியிருந்ததால் நான் சென்றுவிட்டேன். திரு. ழான் லுய்க் செவ்வியார் அங்கு இருந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார். அவர் விரிவாக இதைப்பற்றி எழுதினால் உதவியாக இருக்கும். Posted by Ravikumar at 1:33 PM
 — in Tamil Nadu, India.

நன்றி : https://www.facebook.com/pages/Kalapirar-Empire-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/422918654465828

Thursday, August 22, 2013

ஒபாமா - மீட்பாரா?


இனியும் அரசால் மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவு செய்ய முடியாது. முதலாளித்துவ பொருளாதாரத்தின் பகாசுர பசிக்கு உலகம் முழுவததையும் இரையாக்க போர் புரிய வேண்டும், அமெரிக்கா அதற்க்கு தயாராகிவிட்டது. புஷ் அரசு அமெரிக்க மக்களை நசுக்கி முதலாளித்துவ பொருளாதாரத்தை அம்மணமாக்கினார். அடுத்து வரும் ஒபாமா, அதை மீட்பாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார் மூர். இந்த படம் வெளிவரும் போது தான் ஒபாமா “மாற்றம் வேண்டும்” என்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அவரின் போட்டியாளர் மெக்கயினின் ஆட்கள் ஒபாமா ஒரு சோஷலிஸ்ட் என்று பிரச்சாரம் செய்தார்கள் (இது வேற சோஷலிஸ்ட், மேலே பார்க்கவும்). ஆனால் ஒபாமா மீட்பரா என்ற மூரின் கேள்விக்கு பின்னாட்களில் விடை கிடைத்தது.  ஒபாமா கறுப்பு புஷ் என்று.
கடைசியாக மூர் வெறுத்துப் போய் சர்ச்சை நாடுகிறார், நிச்சயம் யேசு ஒரு முதலாளி இல்லை என்று நிரூபிக்கிறார். யேசு ஏழைகளைத் தான் முன்னிறுத்தினார், அவர்களுக்காகத்தான் வாழ்ந்தார் என பல பாதிரியார்கள் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்கள். முதலாளித்துவ பொருளாதாரம் ஒரு சாத்தான் என்கிறார்கள். சரிதான் ஒரு வேளை வரலாற்றின் படி அந்த ஏழை ஆச்சாரி ஏசு ஏழைகளுக்காகவே வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரை தொடர்ந்து வந்த மதம்? மூருக்கும் சரி முதலாளித்துவ பொருளாதாரத்தில் தங்களை தொலைத்துவிட்டு ராசி கல், சனி கோயில், ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் என்று கணிப்பொறியில் ஜோதிடம் பார்பவர்களுக்கும் சரி இது தீர்வல்ல.
எதிரி கண் முன் நன்றாக தெரியும் போது கண்ணை மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று சொல்வது மதநம்பிக்கையாளரின் வேலை. அதற்குத் தான் திரும்பத் திரும்ப சொல்வது.  ஒரு கம்யுனிஸ்ட் கட்சி தான் முறையே ஆய்ந்து திட்டம் தீட்டி முதலாளிக்கு சாவு மணியடிக்க முடியும் என்று. இல்லையென்றால் இப்படி தான் திரிந்து போய்விடுவார்கள்.
நல்ல வேளையாக எங்கே மூர் சுவிசேஷ கூட்டம் நடத்தப் போய்விடுவாரோ என்று  நினைக்கும் போது சர்ச்சில் இருந்து திரும்ப வந்துவிடுகிறார், அமெரிக்க நாட்டின் ஆரம்ப கால தலைவர்களின் (Founding Fathers) அரசியல் ஏட்டை பார்க்கிறார். மக்களுக்காக , ஒன்றாக இணைந்து, சமதர்ம சமூகமாக வாழ வேண்டும் என்று இருக்கிறது. கடைசியில் மூர் இந்த காபிடலிஸத்திற்க்கு மாற்று என்ன என்று கேட்கிறார். பதிலாக ஜனநாயகத்தை முன்வைக்கிறார்.
அமெரிக்காவில் மக்களின் ஜனநாயகம் வந்தால் போதும் என்கிறார். காலம் காலமாக கம்யுனிஸ்டுகளும் அதைத் தான் சொல்லுகிறார்கள். முதலாளித்துவம் இருக்கும் இடத்தில் ஜனநாயகம் என்ற சொல்லே வெறும் முகப் பூச்சை போலவும் பிணத்தின் மீதான ஒப்பனை போலத்தான் இருக்கும். உண்மையான ஜனநாயகம் என்பதே இந்த முதலாளித்துவத்தை தூக்கியெறியும் புரட்சியில் தான் வரும்.
ஒருவேளை அது புரிந்ததனால் தான் என்னவோ, இந்த காப்பிடலிஸத்திற்க்கு மாற்று ஜனநாயகம், உண்மையான ஜனநாயகம்தான் என்று சொல்லிமுடித்தவுடன், ‘உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள்’ என்ற சர்வதேசிய கீதத்துடன் படத்தை முடிக்கிறார்.
ஆம், உலகத் தொழிலாளர்கள்  ஒன்றுபடும் அந்த காலத்தில் அமெரிக்காவின் கொலைகார முதலாளித்துவம் சவக்குழிக்கு அனுப்பப்படும்.
__________________________________________
நன்றி : வினவு.காம்

அமெரிக்கா பூலோக சொர்க்கம்- உண்மையா?


மைக்கேல் மூரின் Capitalism : A Love Story (2009) – அறிமுகம்! இரண்டாம் உலகப் போர் முடிந்த நேரம் உலகில் அமெரிக்காவிற்கு பெரிய அள‌வு தொழிற் போட்டியே இல்லை, நாட்டில் பியர்ல் ஹார்பர் தவிர வேறு எந்த சேதத்தையும் பார்க்காத அமெரிக்கா, நிதி மூலதன வளர்ச்சியில் பொங்கிச் சிறந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், சோசலிச நாடுகள் கொண்டு வந்த விஞ்ஞான வளர்ச்சியும், உலக நாடுகளில் இருந்து பிழைக்க அகதிகளாக வந்து குவிந்த மக்களும் அமெரிக்காவின் வளர்ச்சியை சீராக உயர வழிவகுத்தனர். அமெரிக்கா பூலோக சொர்க்கம் என்ற மாயை உருவாகத் தொடங்கியது (அந்த சொர்க்கத்திலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் விளைவான தேக்க நிலை 10 வருடத்திற்கு ஒரு முறை வந்து போய்க்கொண்டு தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது). அப்பொழுதும் சரி பின்னர் எப்பொழுதும் சரி முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை விதியின்படி அமெரிக்காவின் ஒரு சிலரிடம் பெரும்பான்மையான பணம் சேருவதும் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்களாக, ஒரு நாள் பணக்காரர் ஆகிவிடுவோம் என்ற கனவில் வாழ்வதும் வாடிக்கையாகி விட்டது.
இன்றைய அமெரிக்க மக்கள் வீதிக்கு வந்து போராடுவதற்கான(Occupy wall street) இன்னொரு விதை முதலாளித்துவ பொருளாதாரத்தைக் காப்பாற்றும் முயற்சியின் விளைவாக வந்த்து. 1917 முன் வரை முதலாளிகள் கசக்கிப் பிழிவதிலும் உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதிலும் மொத்த உழைப்பையும் சுரண்டிக் கொழுப்பதிலும் கவலையில்லாமல் கணஜோராக ஈடுபட்டு வந்தனர். ஆனால் மார்க்சிசத்தின் வரவும் அதைத் தொடர்ந்த ரஷியப் புரட்சியும், உலகம் முழுவதும் இருந்த உழைக்கும் மக்களின் சோஷலிச கனவும் முதலாளிகளை ஆட்டம் காணச் செய்தது, ‘தங்கள் நாட்டில் புரட்சி வந்து விடக் கூடாது ஆனால் சுரண்டவும் வேண்டும்’ இதற்கு ஒரே வழி வேலை செய்பவர்களுக்கு சில சலுகைகளை கொடுப்பது.
மக்கள் நலத் திட்டங்களை அரசு வகுக்கும், அதனை செயற்படுத்தும், சுரண்டும் பணத்திலிருந்து முதலாளிகள் போனால் போகுது என்று கொஞ்சம் தருவார்கள் அதையே சோசலிசம் என்று திரித்து பிரச்சாரம் செய்ய வேண்டியது தான். அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை இப்படி அரசே கல்வி, மருத்துவத் துறையை நடத்துவதை அவர்கள் சோசலிசம் என்று சொல்லிக் கொண்டார்கள்
இந்தியாவில் நேரு மேல்மட்டத்தில் அரசே நிறுவனங்களை நடத்துவதை, அதில் கிஞ்சித்தும் மக்களின் நேரடி பங்களிப்பில்லாத முறையை சோசலிசம் என்று ஜல்லியடித்தார். உண்மையான சோசலிசத்தில்  அரசு அனைத்துத் துறைகளையும் வைத்திருக்கும் என்பது உணமை தான் ஆனால் அரசை உழைக்கும் மக்கள் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியும்,கட்டமைப்பு நெருக்கடியும் அமெரிக்காவின் வளர்ச்சியில் கையை வைத்தது. எப்பொழுதும் பல பில்லியன் டாலர்களில் கொழுத்த முதலாளிகள் அதை உலகின் இன்னொரு முதலாளியிடம் இழந்தார்கள். பெரும்பான்மையான பணம் உலக முதலாளிகளின் பாக்கட்டுகளில் கைமாறத் தொடங்கியது,
சுழற்சி முறையில் அது பல புது பணக்காரர்களை உருவாக்கியது, ஏற்கனவே தொழிலில் கொழுத்து திரிந்தவர்களை தூக்கியெறிந்தது. கடந்த பல ஆண்டுகளாகவே உலக பணக்காரர்கள் மியுசிக்கல் சேரில், இடம் கிடைத்தவர் உட்கருவதும் இன்னொரு ரவுண்டில் அவரே தூர ஓடுவதுமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதில் அமெரிக்க பொருளாதாரம் எனும் குமிழ் உடைவதும் இன்னொரு குமிழியை அமெரிக்க அரசு உருவாக்குவது எனத் தொடர இந்த சூதாட்டத்தை நடத்த ஒரு நல்ல இடமாகவே வால்ஸ்ட்ரீட் மாறியது. (உலகம் முழுவதிலும் இந்த சூதாட்டத்தை அரசு அனுமதியுடன் நடத்தும் இடங்களாக பங்குச் சந்தைகள் உருவாக்கப்பட்டன. அது தான் நாட்டின் கொள்கைகளையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் களமாக மாறியது).
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முதலாளியை வாழவைக்க, முதலாளித்துவத்தை வாழவைக்க கையில் வாளேந்தி மக்களின் சலுகையில் கை வைத்தனர். இனியும் இழக்க ஒன்றுமில்லை எனும் போது– அமெரிக்கா என்றாலும் என்ன, உழைக்கும் மக்கள் உழைக்கும் மக்கள் தானே– போராடத் துவங்கிவிட்டனர்.
மைக்கல் மூர் தன் படத்தில் முதல் சில நிமிடங்கள் ரோம் சாம்ராஜ்ஜியம் எப்படி அழிந்தது எனும் வரலாற்று நிகழ்வை விளக்கும் குரலுக்குப் பின்னால் அமெரிக்க நிகழ்வுகள் சிலவற்றை ஒளிப்படங்களாக தருகிறார்.
சோஷலிஸ நாட்டில் ஒரே ஆட்சி! ஒரே ஆட்சி! என்று உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளை தூற்றும் அதே நேரம் அமெரிக்காவிலோ இரண்டு கட்சி, ஆனால் எது வந்தால் என்ன,  ஆளுபவர்கள் அந்த நாட்டின் முதலாளிகள் தான், அவர்கள் சுரண்டுபவர்கள், நிச்சயம் மக்களின் பிரதிநிதிகள் அல்ல, சூதாடிகள் என்று படத்தை ஆரம்பிக்கிறார்.
அதாவது அமெரிக்காவில் இரண்டு கட்சி, ஒரே ஆட்சி, முதலாளியின் ஆட்சி. அமெரிக்கா மட்டுமல்ல இந்தியா முதல் பல நாடுகளில் இதே நிலைமை தான். யார் முதன்மை அமைச்சராக இருந்தாலும் சரி, எந்த அரசு வந்தாலும் ஆளுபவர்கள் முதலாளிகளாகத்தான் இருக்கிறார்கள்.
2007க்கு பின் பல ஆண்டுகள் வாழ்ந்த தன் வீட்டை காலி செய்யும்படியும் அதை மீறினால் போலிசே வீட்டைக் காலி செய்யும் நிலையும் அமெரிக்க மக்களுக்கு குறிப்பாக சாதாரண மக்களின் வாழ்க்கையில் தொடர் நிகழ்வாகிவிட்டது. ஒரு காட்சியில் காலி செய்ய மறுக்கும் வீட்டை உடைத்து அங்கிருப்பவர்களை வெளியே தள்ளி காலி செய்கிறது காவல் துறை. இன்னொரு பக்கம் தங்கள் சொந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்த வயதான ஏழை தமபதியினரை மாதத் தவணை கட்டவில்லை என்று காலி செய்யும்படி சொல்லுகிறார்கள் காவலர்கள். அதைத் தொடர்ந்து அந்த வயதான பெண் காமிர முன்னால் அழத் தொடங்குகிறார். பின்பு முனங்கலாக “நாங்கள் சாதரண மக்கள், நன்றாக உழைப்பவர்கள், ஒழுங்காக தவணையை செலுத்தினோம்,  ஆனால்  வேலை இல்லை, வருமானம் இல்லை அதனால் தவணை செலுத்தவில்லை” என்று அழுகிறார்.
பல முதலாளித்துவ மேதைகள் அமெரிக்காவின் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு, “தகுதியில்லாதோருக்கு கடன் கொடுத்ததுதான் காரணம் அவர்கள் திரும்பக் கட்டவில்லை” என பக்கம் பக்கமாக ஆய்வுகளையும், கட்டுரைகளையும் எழுதுபவர்கள். ‘அவர்களுக்கு வேலை இல்லை அவர்களின் வேலை பிடுங்கப்பட்டுவிட்டது, அது இன்னொரு நட்டிற்க்கு சென்றுவிட்டது அது தான் காரணம்’ என்பதை மட்டும் மூச்சுவிடுவது இல்லை. ஒரு வேளை முதலாளித்துவ அறிஞர்கள் சொல்லுவதுதான் சரி போலும், உலகம் முழுவதிலும், அது முதலாளித்துவ நாடாக  இருந்தாலும் சரி, உழைக்கும் மக்கள் அடிப்படை வசதிகளை கோரத் தகுதியற்றவர்கள்தான்.
இதைவிடவும் கொடுமை மைக்கல் மூர் காட்டும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் முதல் பாடம் தான். அமெரிக்காவில் பல சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளை தனியார்கள் தான் நடத்துகிறார்கள். ஒரு சிறுவன்/சிறுமிக்கு மாதம் இவ்வளவு என்று அரசு தனியாருக்கு கொடுக்கும் (செலவுகள் போக லாபம் சேர்த்து தான்). நன்றாகத் தான் இருக்கிறது.  ஆனால் முதலாளிக்கு லாபம் வேண்டும், லாபம் வந்தவுடன் அதைவிட அதிக லாபம் வேண்டும், அப்புறம் அதைவிட அதிகமாக.. அப்புறம் அதையெல்லாம் விட அதிகமாக. இந்த லாப வெறிக்கு  பலி, பல சிறுவர்கள்.
ஒரு சீர்த்திருத்த பள்ளியை நடத்தும் முதலாளிக்கு அதிக லாபம் வேண்டும், நேராக அங்கே உள்ளூரில் இருக்கும் போலிஸையும் ஜட்ஜையும் பிடித்தார். பல சிறுவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு, சாதாரண பிரச்சனைக்கெல்லாம் கோர்ட் கேஸ், ஜட்ஜ் குற்றவாளியின் முகத்தைக் கூடப் பார்க்காமல் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினார். குற்றம் விசாரிக்கப்படாமல் நேராக குறிப்பிட்ட சீர்திருத்த பள்ளியில் இத்த்னை மாதம் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்ல வேண்டும். மேலும் இன்னும் சில மாதங்களுக்கு நீட்டிப்பு தரவேண்டும். அவ்வளவுதான்.  ஜட்சுக்கு டீலிங் ரொம்பப் பிடித்துவிட்டது, அதன் விளைவு பல பதின்ம வயது இளஞர்கள் காரணமே இல்லாமல் தங்கள் இளமையை தொலைத்தனர். லாப வெறியின் முதல் பாடமே நம்மை உறைய வைக்க இரண்டாம் பாடமோ அதிர்ச்சியை தந்தது.
நமக்கு விமானத்தில் பறக்க ஆசையாக இருக்கும், ஆனால் விமானிகள் எந்நேரமும் விமானத்தில்தான். எவ்வளவு மிடுக்கான தோற்றம், எப்பொழுதும் சிரிப்பு, உலகில் கஷ்டமே இல்லாத மக்கள் இவர்களாகத் தான் இருப்பார்கள் என்று நாம் நினைத்திருக்க, முதலாளிகளின் லாப வெறிக்கு இவர்கள் மாத்திரம் விதிவிலக்கல்ல என்று மூர் புரியவைக்கிறார்.
அமெரிக்க தனியார் விமான நிறுவனங்கள் விமானிகளுக்கு சம்பளத்தை பலமடங்கு குறைத்தே கொடுக்கின்றன, விமானியால் அந்த வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்குச் செல்வது என்பது சாத்தியமில்லை அல்லது மிகவும் சிரமமம். இந்தக் கையறு நிலைதான் முதலாளிகளுக்கு முத‌லீடு. குறைந்த சம்பள‌ம் கொடுத்தாலும் அந்த விமானியால் வேலையை விட முடியாது, இன்னொரு நிறுவனம் போனாலும் விமானிக்கு அதே நிலைமை தான்.
ஒரு வேளை நம் முதலாளித்துவ ஆதரவாளர்கள் 2001 இரட்டை கோபுரத் தாக்குதல் என பாட ஆரம்பிக்கும் முன் இன்னொரு செய்தி. இந்த நிலைமை 2001க்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. ஒரு விமானி சொல்லும் விடயம் அதிர்ச்சியானது. அவருக்கு தெரிந்த பல விமானிகள் ரத்த அணுக்களை(Plasma) விற்கிறார்களாம், அதாவது ரத்தத்தை எடுத்து ப்ளாஸ்மாவை பிரித்துவிட்டு மீண்டும் ரத்தத்தை உடலிலேயே ஏற்றிவிடுவார்கள். முதலாளிகள் ரத்த உறிஞ்சி என்பது இங்கு நிஜமே ஆகிவிட்டது.
இப்படியாக அமெரிக்க மக்கள் வேலை இழப்பதும் லாப வெறிக்கு பலியாவதும் தொடர, மக்களை எப்படி ஏமாற்றி இன்னும் லாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்கு  திட்டமிட்டு பள்ளிகளில் பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு, மாணவர்களை தேர்ந்த சூதாடிகளாக உருவாக்குவதுதான் அமெரிக்க பல்கலைக் கழகங்களின் வேலை. அமெரிக்காவின் ஹார்வாட் முதல் இந்தியாவின் ஐஐஎம் வரை ஒரே கொள்கை தான், சூதாடிகள் வேண்டும். தாங்கள் இப்படி ஒரு இழிவான வேலை செய்கிறோம் என்று கூட அவர்களுக்கே ஆரம்பக்கட்டத்தில் தெரியாமல் இருக்கவே குழப்புகின்ற பாடங்கள்.
இந்த படத்தில் குறிப்பாக அமெரிக்க வால் ஸ்ட்ரிட்டில் பலர் பெருமையாக சொல்லிகொள்ளும் டெரிவேட்டிவிஸ் என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தை கேட்க ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் ’வாத்தியாரே கன்ப்யூஸ் ஆகிவிட்டார், விளக்க முடியாமல் திணறுகிறார். என்ன வேலை செய்கிறோமோ அதை விளக்க வாத்தியாருக்கே தெரியாத உன்னத கல்வியமைப்பு முதலாளித்துவ பொருளாதாரத்தின் கொடை.
ஆனால் இன்னொரு பக்கம் மூர் அமெரிக்கவில் உள்ள  ஒரு தொழிற்சாலையை காட்டுகிறார். அந்தத் தொழிற்சாலையில் அங்கு வேலை செய்பவர்களே முதலாளிகளாக இருக்கிறார்கள் (பார்த்தவுடன் நானும் ஜெர்காகிவிட்டேன்), உழைக்கிறார்கள்.  தங்களுக்கு யார் தலைவாராக வேண்டும் என்று அவர்களே தீர்மானிக்கிறார்கள். மொத்தம் வெளிப்படையாக இருக்கிறது. நிறுவனத்தின் லாபமும் நஷ்டம் இரண்டுமே பங்கிடப்படுகிறது. அவர்கள் சந்தோஷமாக வேலை செய்கிறார்கள், நிறைவாக வாழ்கிறார்கள். அங்கு சாதாரண வேலையும் செய்யும் தொழிலாளியின் மாத வருமானம் மிகப் பெரிய விமான நிறுவனத்தில் அனுபவமிக்க விமானியின் மாத சம்பளத்தைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது உழைப்பவர்கள் நடத்தும் நிறுவனம் இதுவரை சோடைபோகவில்லை என்றாலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் நடுவே இது தாக்குபிடிப்பது கடினம்தான்.

நன்றி : வினவு.காம்

சமூகத்தில் ஒரு படைப்பாளியின் கடமை என்ன?



சுரண்டப்படுபவர்களை ஒன்று திரட்ட தன் படைப்பை கருவியாக்குவதா? அல்லது சுரண்டித் திரியும் பொறுக்கிகளை மகிழ்விப்பதா?
மேலும் தானும் ஒரு சுரண்டல்வாதியாகி விட்டபின்,  மக்களின் பணத்தில் கொழுத்து திரியும் ஒரு படைப்பாளியின் உன்னத படைப்பே, மக்களை போதையில் ஆழ்த்தி அவர்களை மேலும் சுரண்டுவதாக இருக்கிறது. இது தான் இன்றைய உன்னத உலக படைப்பாளிகளின் சாதனை!
மக்களை ஒன்று திரட்டவும், சமூகத்தின் மிகப் பெரிய ஆவணமாகவும், சமூக முன்னேற்றத்திற்கு இன்றியமையா தூண்டுகோலாகவும் இருக்க வேண்டியது கலை இலக்கிய படைப்புகள் தான்.  ஆனால் அதை இன்றைய படைப்புகள் செய்கின்றனவா?
புனைவு சினிமாக்களின் நடுவே ஆவணப்படத்திற்கென ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தி அதை வெகுமக்களின் முன் வெற்றிகரமாக, தான் கொண்ட கருத்தின் பிரச்சாரத்திற்க்கு பயன்படுத்தி காட்டியதில் குறிப்பிடத்தக்கவர் அமெரிக்க ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர்.
இவரது கருத்துகள் விமர்சனத்திற்கு உட்பட்டவைதான், ஆனால் புறக்கணிக்கக் கூடியவையல்ல. வியாபாரத்திற்கும், பொழுதுபோக்கிற்கும் அதிகளவு பணத்தை குறுகிய கால முதலீட்டில் சம்பாதிப்பதுதான் சினிமாத் துறை என்ற நிலையில், அதே துறையில் மக்கள் பிரச்சனைகளைப்  பற்றி பேசும் ஆவணப்படத்திற்க்கென ஒரு மதிப்பையும், முக்கியத்துவத்தையும் பெற்று தந்தன மைக்கேல் மூரின் திரைப்படங்கள்.
அமெரிக்க மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படும் அதே நேரம் அமெரிக்க மக்களை விழிப்படையச் செய்யும் அவரின் ஆவணப் படங்களுள் மிக முக்கிய திரைப்படம்தான் Capitalism, a love story. மக்களைக் கொல்லும் முதலாளித்துவத்தை அதன் அழுகிய பக்கங்களை, கெட்டழுகிக் கொண்டிருக்கும் அதன் தனமையையும், அதன் போலி பிரச்சாரங்கள், பொய் வாக்குறுதிகளை அடித்து துவைத்து காயப்போட்டது தான் இந்தப் படத்தின் முதல் சாதனை.
உடலின் வீக்கத்தை வளர்ச்சி என்று பார்க்க வைத்த முதலாளித்துவ மேதைகளை அம்பலபடுத்தி அந்த வீக்கம் சீழ் பிடித்து துர்நாற்றம் வீசுவதை அமெரிக்க மக்களின் வலியிலிருந்து  நமக்கு உணரவைத்த சிறந்த படைப்பு இது.
நன்றி : வினவு.காம்

மைக்கேல் மூரின் Capitalism: A Love Story (2009) – ஆவணப்படம் – அறிமுகம் !


அமெரிக்காவின் மிக முக்கிய வீதி, உலகின் மிகப் பெரியவங்கியின் பிரதான கிளையின் வெளியே நின்றபடி தன் கையில் இருக்கும் ஒலிப்பெருக்கியில் பேசத் துவங்குகிறார் ஒருவர்:
“நான் இந்த வங்கியின் அதிகாரிகளை மக்கள் சார்பில் கைது செய்ய வந்திருக்கிறேன். நீங்களாகவே வந்து சரணடைந்துவிடுங்கள். உங்களுடைய உயிருக்கு எந்த பாதிப்பும் வராது”
பின்னர் அந்த பெரிய கட்டடங்களை சுற்றி “CRIME SCENE DO NOT PASS” (குற்றம் நடந்த இடம் யாரும் வராதீர்கள்) என்ற வாக்கியம் தாங்கிய டேப்பை ஒட்டுகிறார் அவர். அந்த மனிதர் மைக்கல் மூர் என்ற அமெரிக்க ஆவணப்பட இயக்குனர்.
ஒரு நிமிடம் நம்மை திகைக்க வைக்கும் இந்த காட்சி மைக்கல் மூர் இயக்கிய திரைப்படமான  ‘Capitalism A Love Story” யின் இறுதிக்காட்சி. உலக மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தை அம்பலப்படுத்திய மிக முக்கிய திரைப்படம் இது.
நன்றி : வினவு.காம்

Wednesday, August 14, 2013

சுதந்திர சிறகுகள்


 (11 ஆகஸ்ட் 2013 தினமலர்-வாரமலர் இதழில் வெளியான கவிதை)


நம் சிறகுகள்...
பிறர் பறப்பதற்கா ?

நம் சுதந்திரம்...
பிறர் ஆள்வதற்கா ?

சிறுவர்களே!
வசந்தச் சிறகுகள்...
திரை அரங்கிலே தொலைத்திடவோ ?

இளைஞர்களே!
சிந்தனைச் சிறகுகள்...
காதல் சிறையிலே பூட்டிடவோ ?

தாய்மார்களே!
கூர்மதிச் சிறகுகள்...
சின்னத்திரைச் சீரியலிலே  சிதைத்திடவோ ?

வாக்காளர்களே!
வாக்குச் சிறகுகள்...
அரசியல்வாதியிடம் வாடகைக்கு விட்டிடவோ ?

பாட்டாளித் தோழரே!
உழைப்புச் சிறகுகள்...
பணமுதலையிடம் அடகு வைத்திடவோ ?

பட்டதாரிகளே!
திறமைச் சிறகுகள்...
பன்னாட்டு திமிங்கலத்திடம் பறிகொடுத்திடவோ ?

இன்னும் ! இன்னும் !
உதிர்ந்திட்ட நம் சிறகுகளோ...
ஏராளம் ! ஏராளம் !

இனியாவது...
பெற்ற சுதந்திரத்திற்கான இனிப்போடு...
பெற வேண்டிய சுதந்திரத்திற்கான
கண்ணீரையும் பிரசவிப்போம் !

உயரட்டும்
தேசியக் கொடியோடு
நமது சிறகுகளும்...
சுதந்திரமாய் !!
-     பாண்டூ
-     த.க.இ.பெருமன்றம்
-     6 ஜவுளிக்கடை வீதி
-     சிவகாசி – 626123
-     9843610020


Monday, August 5, 2013

பயனில்லாத வழியில்...


              பயனில்லாத வழியில் மதத்தின் பேரால் நமது பணத்தையெல்லாம் பாழாக்குகிறோம். ஒரு மனிதன் தினம் 8 அணா சம்பாதித்து 4 அணா மிச்சம் பிடித்தால் அவன் அதை பிதிர்களுக்கும், சடங்குகளுக்கும், சாமிகளுக்கும், பொங்கல்களுக்கும் செலவு செய்யவே வழி காட்டப் படுகிறான். அவன் ஒரு வாரத்தில் சேர்த்ததைக் குடியில் செலவு செய்கிறான். ஒரு மாதத்தின் மீதத்தைப் பண்டிகையில் செலவு செய்கிறான். ஒரு வருஷ மீதத்தைத் திதியில் செலவு செய்கிறான். 10 வருஷ மீதத்தைக் கலியாணம் கருமாதியில் செலவு செய்து விடு கிறான். இவையன்றியும் சில்லறைச் சடங்குகளும், சில்லறைத் தேவதை களும் உற்சவங்களும் நம் செல் வத்தை விழுங்கிவிடுகின்றன. மேற்கொண்டு கடனும் வாங்கச் செய்கின்றன. இவைகளே நாம் நிரந்தர கடனாளியாகவும் தரித்திர வான்களாகவும் இருப்பதற்குக் காரணங்களாகும். இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை

- தந்தை பெரியார் குடிஅரசு - சொற்பொழிவு 10.08.1930, 17.08.1930