Thursday, July 3, 2014

ஆதிசங்கரன் X விவேகானந்தர்



இவர்தான் விவேகானந்தர்
உலகின் எல்லா மதங்களிலும் உலகம் சார்ந்த செயல்கள் (கர்ம காண்டம்) மெய்ப்பொருள் சார்ந்த செயல்கள் (ஞான காண்டம்) என்று இரு பகுதிகள் உண்டு. மக்களுக்கான பிரச்சினை இருப்பது உலகு சார்ந்தவை பற்றியே தவிர, மெய்ப்பொருள் சார்ந்த விசயங்களில் அல்ல. கொச்சையாகச் சொன்னால், அன்ன விசாரமே பெரும் விசாரம். தத்துவ விசாரம் பண்டாரப் பரதேசிகளுக்கானது. அவர்களைப் பற்றிய விவேகானந்தரின் கருத்து துல்லியமானது. (கருத்துகள் தொகுதி 8, பக்கம் 290).
கெட்டவர்களும் ஏமாற்றுக்காரர்களும் ஆகிய புரோகிதர்கள் அனைத்து வகை மூடநம்பிக்கைகளையும் வேதங்களின் சாரம் என்றும் இந்து மதத்தின் சாரம் என்று கூறிப் பிதற்றுகிறார்கள். இந்தப் போக்கில் இப்புரோகிதர்களும் அவர்களின் அப்பன், பாட்டனும்கூட, கடந்த 400 தலைமுறைகளாக வேதத்தின் சிறு பகுதியைக் கூடப் பார்த்ததில்லை. ஆசாரங்களைக் கடைப்பிடித்து மிகக் கீழான இழிநிலைக்கு அவர்கள் வந்துவிட்டனர். இந்த யுகத்தில் பார்ப்பனர் உருவில் இருக்கும் அரக்கர்களான இவர்களிடமிருந்து மக்களையும் நாட்டையும் தெய்வம்தான் காப்பாற்ற வேண்டும் என்றே கடுஞ்சொற்களால் திட்டித்தீர்த்து இருக்கிறார்.
Rascally and Wily Priests â¡Aø£˜. All Sorts of Mummery and Tomfoolery Gist of Vedas â¡Aø£˜. Rascals of Priests என்கிறார்.
என்னே பொருத்தமான அடைமொழிகள்!
இந்து மதத்திற்கு அவர் தரும் நற்சான்றிதழ்களைப் பாருங்கள்: No Religion on Earth Treads upon the Necks of the Poor and the Low in such a Fashion as the Hinduism   (உலகில் எந்த ஒரு மதமும் இந்து மதத்தைப் போல, அம்மதத்தைச் சார்ந்த ஏழைகளையும் கீழ்நிலையில் இருப்பவர்களையும் கழுத்தைப் போட்டு மிதிப்பதில்லை) (தொகுப்பு 5, பக்கம் 15).
உதைக்க வேண்டும்
இந்துமதக் கொடுமைகளைப் போக்கிட வழியும் கூறியுள்ளார் விவேகானந்தர். வாருங்கள், மனிதர்களாகுங்கள். எந்தவித முன்னேற்றத்திற்கும் தடையாக உள்ள புரோகிதர்களை உதைத்துக் துரத்துங்கள். அவர்கள் மனது என்றைக்கும் விரிவு அடையாது. பல நூற்றாண்டுக்கால மூடநம்பிக்கைகளின் வழித் தோன்றல்கள். கொடுங்கோன்மையின் வாரிசுகள். புரோகித முறையை ஒழித்துக் கட்டுவோம் வாருங்கள்! என்று அறைகூவல் விடுத்தார். எத்தனைப் பேர் கேட்டார்கள்? (தொகுப்பு 5, பக்கம் 10).
முளைக்கும் புது மதம்
நமது மதத்தில் உள்ள புரோகித முறையை அடியோடு ஒழித்துக் கட்டுங்கள். அப்போது உலகிலேயே சிறந்த புதிய மதம் ஒன்று உங்களுக்குக் கிடைக்கும் என்றே சொல்லிப் பார்த்தார். எத்தனைப் பேர் முன்வந்தனர்? (தொகுப்பு 4 பக்கம் 368).
இந்து மதத்தைப் பற்றிப் பெருமையாக உலக மதங்களின் மாநாட்டில் (சிகாகோ நகரில்) பேசினார் என்பார்கள். அந்தச் சிறப்பு அம்மதத்தில் இருக்குமானால், அதற்குக் காரணமானவர்கள் பார்ப்பனர்கள் அல்ல என்றார் விவேகானந்தர்.
சத்திரியர்கள் மட்டுமே காரணர் என்கிறார். உபநிஷத்களை எழுதியோர் யார்? ராமன் யார்? கிருஷ்ணன் யார்? கவுதம புத்தர் யார்? சமண தீர்த்தங்கரர்கள் யார்? சத்திரியர்கள் போதித்தவை எல்லாம் அனைத்து மக்களுக்குமானவை. பார்ப்பனர்கள் எதைப்பற்றி எப்போது எழுதினாலும் (அது அவாளுக்கு மட்டுமே) அவற்றை மற்றவர்களுக்கு மறுத்தார்கள் என்கிறார் விவேகானந்தர். (தொகுதி 4, பக்கம் 359).
விவேகானந்தர் பவுத்தர்
புத்தரே எனது இஷ்ட தெய்வம். (Ishta God) நான் பவுத்த மதத்தவனல்ல. ஆனாலும் நான் ஒரு பவுத்தன். (I am not a Buddhist and Yet I am)  என்றே அவர் அமெரிக்காவில் பிரகடனப்படுத்தினார். (தொகுதி 1, பக்கம் 21).
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் வேதாந்தம் எதிர்கால மதமா? எனும் தலைப்பில் பேசிய போது, எல்லா மதங்களும் இறுதிநிலை பற்றிய கருத்தை (வேதாந்தத்தை) ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். இந்துமதக் குழப்பக் குப்பைக் கொள்கையான வேதாந்தத்தை அல்ல. (தொகுதி 8).
கடவுளை ஒழியுங்கள்
மூடநம்பிக்கைகள் எல்லாம் ஒழியட்டும். ஆசார்யர்களோ, தரும நூல்களோ, தெய்வங்களோ கிடையாது. கோயில்களை, அர்ச்சகர்களை, தேவதைகளை, அவதாரங்களை, கடைசியாகக் கடவுள்களையும் ஒழித்துக் கட்டுங்கள். அறிஞர்களே எழுமின். பயம் கொள்ள வேண்டாம். கடவுளைப் பற்றிப் பேசுவதை நிறுத்துங்கள். மூடநம்பிக்கைகள் பற்றிப் பரப்புரைக்காதீர்கள். உண்மைதான் வெல்லும். என் மனதில் கடவுள் தோன்றும். நான்தான் அதனைத் தோற்றுவிக்கிறேன். மற்றைய மூடநம்பிக்கைகளைப் புறந் தள்ளுங்கள்... என்றாரே! (தொகுதி 1, பக்கம் 502).
இத்தனையையும் தெளிவாகப் பேசிய விவேகானந்தரை மறைத்து அவரை வீரத்துறவியாக்கி இந்துமதத்துக்குச் சொந்தம் என்றாக்கி விட்டார்களே! அணைத்து அழித்தல் என்பது இதுதான்!
அவர்கள் இந்து அல்ல
விவேகானந்தர் இந்து அல்ல. அவரின் குரு ராமகிருஷ்ணன் என்பவரும்கூட இந்து அல்ல.  வங்காளப் பார்ப்பனராகப் பிறந்தார். எனினும் தம் பூணூலையும் புழுதி மண்ணையும் சமமாகக் கருதினார். மண்ணை ஆற்றில் வீசியதைப் போலவே பூணூலையும் ஆற்றில் வீசி எறிந்தார். மனிதன் ஆனார். அத்வைதியாக இருந்தவர் பின் இசுலாம் பற்றிப் படித்து அறிந்து கொண்டார். கிறித்துவ நெறியையும் பற்றித் தெரிந்துகொண்டு போற்றினார். இசுலாமியரைப் போலவும் கிறித்துவரைப் போலவும் ஆடை உடுத்திக் கொண்டார். அக்கொள்கைகளைச் சார்ந்தவர்களின் இல்லங்களில் அவர்கள் சமைத்த உணவை உண்டார். மதக்கட்டுகள் அற்று உலகை நேசிப்பவராக மாறினார். அவரது பெயரால் செயல்படும் தொண்டு நிறுவனம்கூட இந்துமதம் சார்ந்த நிறுவனம் அல்ல. எம்மதமும் சாராத மும்மதம் சார்ந்த நிறுவனம்தான். எனவே சிறுபான்மையரின் நிறுவனம் எனும் தகுதிகோரி நீதிமன்றம் மூலம் ஆணை பெற்றுள்ளனர்.
ஆனால் ஒரு மயக்கத்தை உண்டுபண்ணி இந்து மதத்தைப் போல, தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றுகிறார்கள். விவேகானந்தரையும் இந்துமதச் சிமிழுக்குள் அடைக்க முயல்கிறார்கள்.
நால்வர்ணம் நாட்டில் இல்லை. இருப்பது பார்ப்பனர், சூத்திரர் என்ற இரண்டே வர்ணம் மட்டுமே! என்றார் விவேகானந்தர். இதே கருத்தைத் தந்தை பெரியாரும் சொன்னார். பார்ப்பனரும் சூத்திரரும் மட்டுமே வாழும் நாட்டில் வசிக்கக் கூடாது என்று இந்துமத சாத்திரங்கள் கூறும் நிலையில், பார்ப்பனர்கள் இந்த நாட்டை விட்டுத் தொலைந்து போகட்டும் என்றவர் விவேகானந்தர். பார்ப்பனர்கள் மிலேச்சர்களின் உணவை உண்கிறார்கள். அதற்கான தண்டனை / கழுவாய் என்று சாத்திரம் குறிப்பிடும் முறை என்ன தெரியுமா? அவர்கள் தங்கள் கையால் தங்களுக்குத் தாங்களே நெருப்பு வைத்துப் பற்றி எரிந்து சாக வேண்டும். அதைப்போல செய்துகொள்வீர்களா? என்று கேட்கிறார். (கருத்துகள் தொகுப்பு 3, பக்கம் 339).
ஆக, இராமகிருஷ்ணனையும் விவேகானந்தரையும் இந்தக் கொடிய படுபாதக இந்துமதப் பார்ப்பனர்களின், புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
- சார்வாகன்
நன்றி : http://www.unmaionline.com/new/2062-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-x-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-2.html




No comments:

Post a Comment