Friday, February 21, 2014

கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நூல் அறிமுக அரங்கம்

            விருதுநகர்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நூல்கள் அறிமுக அரங்கமும் படைப்பரங்கமும் நடைபெற்றது.
            விருதுநகர் அருகிலுள்ள ஆர்.ஆர்.நகரில் தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் விருதுநகர் கிளையின் சார்பில் நூல்கள் அறிமுக அரங்கமும் படைப்பரங்கமும் நடைப்பெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் இரா.பாலச்சந்திரன் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் வரவேற்றார்.
            விடுதலைப் போராளி ஜி.ராமசந்திரன் ‘சுயசரிதை, கட்டுரை மற்றும் ஆவணங்கள் என்ற நூலை இரா.பாலசந்திரன் எழுதி உள்ளார். நூலை அறிமுகம் செய்து சாத்தூர் கிளைசெயலாளர் எஸ்.பழனிக்குமார் பேசுகையில், தலைவர் பி.சீனிவாசராவை சந்தித்து விவசாய சங்கம் துவக்க எடுத்த முயற்சி, இராஜபாளையம், வத்திராயிருப்பு மாநில மாநாடு நடத்த துணை நின்ற பின் இராமநாதபுரம் சதி வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் இருந்தது ஆகியவற்றை படிக்கும்போது உண்மையிலேயே நமது காலப் பணிகள் எல்லாம் மிகச் சுலபமாகத் தெரிகிறது. 14 வயதில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்றிருக்கிறார். அவரது சகோதரி ஜி.நாராயணம்மாள் தமிழ் நாட்டில் இரண்டாவது பெண் தனிநபர் சத்தியாக் கிரகியாக பாடுபட்டுள்ளார். ஜிரா.ராமசந்திரன் மனைவி தலைவர்களுக்கு  கூரியராகவும், உணவு அளித்தும் தலைமறைவு வாழ்க்கையில் செயல்பட்டதை படிக்கும் பொழுது உண்மையிலேயே நம்மை உணர்ச்சிவயப்பட வைக்கிறது. அனைவரும் வாங்கி படிக்க வேண்டும் என்றார்.
             ‘இராமலட்சுமியின் வாக்குமூலம்’ குறு நாவலை கவிஞர் பஸிரா ரசுலும் மற்றும் கந்தகக்கவி பாண்டூவும், ‘மௌனம் பேசும் வார்த்தைகள்’ கவிதை நூலை சிவகாசி கிளை பொருளாளர் அ.கி.முருகன் ஆகியோர்கள் அறிமுகப்படுத்திப் பேசினார்கள்.
            படைப்பரங்கில் மாவட்டத் தலைவர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி சிறுகதையையும், குருவிக்கூடு கவிதை நூலை எழுதிய கவிஞர் ராதா மணிக்குமார் கவிதையையும் கந்தகக்கவி பாண்டு, சாத்தூர் வ.நவனீத கிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். சேலத்திலிருந்து வெளிவரும் சிற்றிதழ் தாரணி அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்மை நாகராஜன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் தீனதயாளி, ஆர்.ஆர்.நகர் சி.பி.ஐ பொறுப்பாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக படைப்பரங்கத்தில் சிறுகதையாளர் ஸ்வரமஞ்சரி தலைமையுரை நிகழ்த்தினார்.
ஜனசக்தி

04-02-2014

1 comment:

  1. DEAR COM., KINDLY ARRANGE TO ISSUE A COMP. COPY OF சேலத்திலிருந்து வெளிவரும் சிற்றிதழ் தாரணி TO MAILING ADDRESS : LIBRARIAN, ESAKKI, V.O.C.LIBRARY & ARCHIVES, OLD PORT, BEACH ROAD, OPP. CUSTOMS-1901,TUTICORIN 628 001, TAMILNADU. LIBRARY COMMITTEE-தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,துத்துக்குடி மாவட்டம்

    ReplyDelete